Tuesday, April 22, 2008

உலகிலேயே மிகப்பெரிய நீர் மின்திட்டம் குறித்து பேச்சுவார்த்தை


உலகிலேயே மிகவும் பெரியதான நீர் மின்சக்தி உற்பத்திக்கான அணைக்கட்டுத் திட்டம் ஒன்று குறித்து, ஆப்ரிக்க அரசியல்வாதிகளும், உலக மட்டத்திலான நிதி முதலீட்டாளர்களும் பேச்சு நடத்தியுள்ளனர்.
இன்கா திரி என்று அழைக்கப்படும் இந்த பிரமாண்ட திட்டம் காங்கோ ஆற்றை, காங்கோ ஜனநாயக குடியரசை ஒட்டி ஓடச்செய்வதுடன், ஆப்ரிக்காவின் மின் விநியோகத்தை இரண்டு மடங்காகவும் ஆக்கும்.
மின்சாரம் இல்லாமல் இருட்டில் வாழுகின்ற பல கோடிக்கணக்கான ஆப்ரிக்கர்களுக்கு, இந்தத்திட்டம் தூய்மையான மற்றும் அவர்களால் வாங்கக் கூடிய விலையில் சக்தியை கிடைக்கச் செய்யும் என்று, இங்கு லண்டனில் சந்திப்பை நடத்திக்கொண்டிருக்கும், உலக சக்தி அமைப்பு கூறியுள்ளது.
ஆனால், இங்கு உற்பத்தியாகும் இந்த மின்சக்தி, தொழில்வள மையங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பதால், அது அந்த ஆப்ரிக்கர்களுக்கு கிடைக்காமல் போகலாம் என்று ஒரு சுற்றுச்சூழல் குழு தெரிவித்துள்ளது

No comments: