காய்கறி முதல், கம்ப்யூட்டர் வரை விற்கப்படும் 'மால்'களுக்கும், மற்ற சில்லரை அங்காடிகளுக்கும் போட்டா போட்டி அதிகரித்து வருகிறது. போன் செய்தால் போதும், வீட்டு வாசலுக்கே அங்காடி ஊழியர்கள் வந்து சப்ளை செய்கின்றனர்.சென்னை, டில்லி உட்பட, பல நகரங்களில்'மால்' கலாசாரம் வந்து விட்டது; இதைத்தவிர, உள்ளூரில் உள்ள சில்லரை விற்பனையாளர்கள் கூட்டாக சேர்ந்தும் விற்கின்றனர். 'மால்'களுடன் இவர்கள் போட்டி போட ஆரம்பித்து விட்டனர்.டில்லியில்'மால்'களுக்கு போட்டியாக உள்ள சில்லரை விற்பனை அங்காடிகள், போன் செய்தால் போதும், வீட்டுக்கே பொருட்களை சப்ளை செய்கின்றன.குர்கான் உட்பட, எந்த பகுதியில் இருந்து போன் செய்தாலும் போதும், காய்கறி, மளிகை பொருட்கள், சோப்பு, பிஸ்கட், குளிர்பானங்கள் என்று எல்லாவற்றையும் சேகரித்துக்கொண்டு, வீட்டுக்கு நேரடியாக சப்ளை செய்யும் முறையை பல சில்லரை அங்காடிகள் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டன.இதனால், 'மால்'களும் வீட்டுக்கு வீடு பொருட்களை சப்ளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.'மால்'களில்,காய்கறி, பழங்கள், சோப்பு, மளிகை பொருட்கள் விற்பனை 25 சதவீதம்; அதுபோல, சில்லரை அங்காடிகளில், இவற்றின் வர்த்தகம் 50 சதவீதத்தை தாண்டுகிறது. அழுகும் பொருட்களை வீட்டுக்கு சென்று சப்ளை செய்வதால் விற்றும் விடுகிறது; நஷ்டமும்ஏற்படுவதில்லை. இதை புரிந்து கொண்ட சில்லரை அங்காடியினர், சீருடை அணிந்த ஊழியர்களை அமர்த்தி, வீட்டுக்கு வீடு காய்கறிகள், மளிகை பொருட்களை சப்ளை செய்ய ஆரம்பித்துள்ளனர். சில்லரை அங்காடியினர் கூறுகையில்,'மால்களில் பொருட்களை விற்பதை விட, நாங்கள் அதிக அளவில் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை விற்கிறோம். வீட்டுக்கு வீடு சப்ளை செய்யும் முறைக்கு அதிக வரவேற்பு உள்ளது' என்று தெரிவித்தனர்.
நன்றி
தினமலர்
No comments:
Post a Comment