யு.எஸ். ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜிம்பாப்வேயின் கேரா பிளாக் இணை முன்னேறியது.
அதேநேரத்தில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - பகாமஸின் மார்க் நெளல்ஸ் இணை தோல்வியுற்று வெளியேறியது.
இப்போட்டிகளின் தரவரிசையில் 5-ம் இடத்திலுள்ள பயஸ் - பிளாக் இணை, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் செக். குடியரசின் மார்டின் டாம் - விளாடிமிரா உலிரோவா இணையை வீழ்த்தி, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
செக். குடியரசின் லூகாஸ் டிளவுஹியுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் போட்டிகளில் விளையாடி வரும் பயஸ், ஏற்கெனவே காலிறுதிக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், கலப்பு இரட்டையரில் ஏற்கெனவே தோல்வியுற்று வெளியேறிவிட்ட மகேஷ் பூபதி, ஆடவர் இரட்டையர் பிரிவிலும் தோல்வியைத் தழுவினார்.
பூபதி - நெளல்ஸ் இணை தமது மூன்றாம் சுற்றில், அர்ஜென்டினாவின் மெக்ஸிமோ கோன்சலஸ் - ஜுவான் மோனாகோ இணையிடம் 6-2, 4-6, 4-6 என்ற செட்களில் தோல்வியைத் தழுவியது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment