Tuesday, April 22, 2008

.தேமுதிகவுடன் கூட்டு பற்றி பரிசீலனை: மார்க்சிஸ்ட்

மக்கள் பிரச்சனைகளில் தங்கள் நிலையை தேமுதிக ஆதரிப்பதை பொறுத்து, அதனுடன் கூட்டு வைப்பது பற்றி மார்க்சிஸ்ட் பரிசீலிக்கும் என்று, அதன் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை கோவையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில், மக்களவை தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என்றார்.மதவெறியை எதிர்ப்பதைப் போலவே வரும் மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார கொள்கையையும் தாங்கள் எதிர்க்கப் போவதாகச் சொன்ன அவர், தேசிய அளவில் 3வது அணியை உருவாக்குவது குறித்து மதுரையில் இம்மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கும் மாநில மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றார்.விஜயகாந்தின் தேமுதிக, பாமக ஆகியவற்றை தாங்கள் கூர்ந்து நோக்குவதாகவும், பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் தாங்கள் எடுக்கும் நிலையை ஆதரிப்பதைப் பொறுத்து தேமுதிகவுடன் கூட்டு வைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் வரதராஜன் குறிப்பிட்டார்.தங்களைப் போலவே மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் போராடி வருவதாக, வரதராஜன் தெரிவித்தார். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி வருவதை பாராட்டிய அவர், எனினும் அதில் திமுக பின்தங்கியுள்ளது என்றார்

No comments: