Tuesday, September 2, 2008

யு.எஸ். ஓபன் அரையிறுதியில் பயஸ் இணை; பூபதி தோல்வி

யு.எஸ். ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றுக்கு, இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜிம்பாப்வேயின் கேரா பிளாக் இணை முன்னேறியது.

அதேநேரத்தில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - பகாமஸின் மார்க் நெளல்ஸ் இணை தோல்வியுற்று வெளியேறியது.

இப்போட்டிகளின் தரவரிசையில் 5-ம் இடத்திலுள்ள பயஸ் - பிளாக் இணை, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் செக். குடியரசின் மார்டின் டாம் - விளாடிமிரா உலிரோவா இணையை வீழ்த்தி, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

செக். குடியரசின் லூகாஸ் டிளவுஹியுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் போட்டிகளில் விளையாடி வரும் பயஸ், ஏற்கெனவே காலிறுதிக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், கலப்பு இரட்டையரில் ஏற்கெனவே தோல்வியுற்று வெளியேறிவிட்ட மகேஷ் பூபதி, ஆடவர் இரட்டையர் பிரிவிலும் தோல்வியைத் தழுவினார்.

பூபதி - நெளல்ஸ் இணை தமது மூன்றாம் சுற்றில், அர்ஜென்டினாவின் மெக்ஸிமோ கோன்சலஸ் - ஜுவான் மோனாகோ இணையிடம் 6-2, 4-6, 4-6 என்ற செட்களில் தோல்வியைத் தழுவியது.

Wednesday, April 23, 2008

டெல்லி : ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் அமைதியக முடிந்தது


இந்தியாவை பரபரப்பாக்கிய ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் அமைதியாக முடிந்தது.திபெத் கலவரக்காரர்களின் மிரட்டலை அடுத்து தலை நகரில் வரலாறு காணாத் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஜோதி ஓட்டத்தின்போது பெரும் கலவரங்கள் ஏற்படலாம் என் உளவுத்துறை எச்சரித்திருந்தது.

ஜோதி ஓட்டம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து இந்தியா கேட்வரை 2.3 கி.மீ தொலைவுக்கு நடந்தது.இதில் விளையாட்டு மற்றும் சினிமாத் துறையைச் சேர்ந்த 72 பேர் ஜோதியைக் கையில் ஏந்திச் சென்றனர்.

Tuesday, April 22, 2008

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்


வண்ணாத்திக் குருவிஆங்கிலத்தில் 'Magpie Robin' என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி. வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம்? வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடயதால் தான் இக்குருவிக்கு இப்பெயரோ? அல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில் வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ? வண்ணாத்திக் குருவி நாம் வாழும் இடங்களில் காணப் படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைக் காண முடியும். மற்ற மாதங்களில் இது மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்றுவிடும். பிப்ரவரி மாதம் ப்ரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும். முதலில் ஸ்ருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் ஸ்வரங்கள் போகப் போக காதுக்கினிய கீதங்களாக மாறும்.
ஸ்ருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும் தோன்றுவாள். ராதை வேறு யாரும் இல்லை. சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவி தான். இரு குருவிகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும். இருவர் சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காதல்லவா? எங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள் விளையாட்டில் குறுக்கிடும். இறு ஆண்களுக்கிடையே சண்டை நடக்கும். வில்லன் தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும், அதாவது வீடு, இல்லை இல்லை, கூடு கட்ட ஆரம்பிக்கும். வில்லன் மற்றொறு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வெண்டுமென்பதில்லை. நீங்களாகக் கூட இருக்கலாம். ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும் பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள். அது உங்களையும் தாக்கும். நாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்துவிட்டதாலா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். சொந்த அனுபவத்தில் தான் இதைச் சொல்கிறேன்.
வண்ணாத்திக் குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ அமைக்கும். கூடு காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை (pad) ஆகும். செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும். குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும். வண்ணாத்திக் குருவியைக் கண்டால் கவனமாகப் பாருங்கள். அதன் ஆடை அழகிலும், குரலிலும் நீங்களும் மயங்கிப் போய் இவற்றை அளித்த ஆண்டவனைக் கட்டாயம் காண்பீர்கள்.

வண்ணாத்திக் குருவியை 1965ல் படம் பிடித்தபோது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் இதோ. பங்களூரில் விதான சௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினைக் கண்டு நானும் எனது இரண்டு சகாக்களுமாக படம் பிடிக்க ஆரம்பித்தோம். அலுவகங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில், "என்னங்க, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டனர். நாங்களும் பொறுமையாக பதில் அளித்து வந்தோம். மூன்றாவது நாள் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க மற்றொருவர், "விடுப்பா, அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன். அந்த மரப் பொந்தயே நாள் பூரா பாத்துகிட்டு நிக்கறாங்க" என்றாரே பார்க்க வேண்டும்

.தேமுதிகவுடன் கூட்டு பற்றி பரிசீலனை: மார்க்சிஸ்ட்

மக்கள் பிரச்சனைகளில் தங்கள் நிலையை தேமுதிக ஆதரிப்பதை பொறுத்து, அதனுடன் கூட்டு வைப்பது பற்றி மார்க்சிஸ்ட் பரிசீலிக்கும் என்று, அதன் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை கோவையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில், மக்களவை தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என்றார்.மதவெறியை எதிர்ப்பதைப் போலவே வரும் மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார கொள்கையையும் தாங்கள் எதிர்க்கப் போவதாகச் சொன்ன அவர், தேசிய அளவில் 3வது அணியை உருவாக்குவது குறித்து மதுரையில் இம்மாதம் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கும் மாநில மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றார்.விஜயகாந்தின் தேமுதிக, பாமக ஆகியவற்றை தாங்கள் கூர்ந்து நோக்குவதாகவும், பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் தாங்கள் எடுக்கும் நிலையை ஆதரிப்பதைப் பொறுத்து தேமுதிகவுடன் கூட்டு வைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் வரதராஜன் குறிப்பிட்டார்.தங்களைப் போலவே மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் போராடி வருவதாக, வரதராஜன் தெரிவித்தார். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி வருவதை பாராட்டிய அவர், எனினும் அதில் திமுக பின்தங்கியுள்ளது என்றார்

மக்கா நேரத்தை உலக மைய நேரமாக்கக் கோரிக்கை


புவியின் உண்மையான மையமாக முஸ்லிம்களின் புனித நகரான, சவுதி அரேபியாவின் மக்கா நகரம் திகழ்வதாகக் கூறுகின்ற, சில முஸ்லிம் விஞ்ஞானிகளும், மதகுருமாரும், கிரீன்விச்சை மையமாகக் கொண்ட உலக நேரத்துக்குப் பதிலாக, மக்கா நேரம் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
கட்டாரில் நடந்த மாநாடு ஒன்றில் வாதிட்ட புவியியல் நிபுணர் ஒருவர், ஏனைய அனைத்து தீர்க்க ரேகைகளைப் போலல்லாது, மக்கா வட காந்தப் புலத்துடன் பொருந்திவருகிறது என்று கூறினார்கள்.
பிரிட்டிஷ்காரர்கள் உலகின் காலனித்துவ சக்தியாகத் திகழ்ந்த போதே, கிரீன்விச்சை மையமாகக் கொண்ட ஜி எம் டி நேரம் அறிமுகப்படுத்தத்கப்பட்டது என்று கூறிய அவர், அத்துடன் மாற்றங்கள் நடப்பதற்கான காலம் இதுவென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து முஸ்லிம்களும் தாம் தொழுகின்ற போது மக்கா இருக்கும் திசையை நோக்கியே தொழுவார்கள்.